Wednesday 11 December 2013

Pista Cashew Casatta

முந்திரி பிஸ்தா ஸ்வீட் 
 










தேவையான பொருட்கள் : முந்திரி, காய்ந்த திராட்சை, திரவ குளுக்கோஸ் தலா ஒரு கப், பிஸ்தா  2 கப்,  சர்க்கரை 4 கப்,   தேவையான  அளவு நெய்.

செய்முறை :

ஒரு கப் பிஸ்தாவை 20 நிமிடங்கள் ஊறவைத்து தோலை நீக்கிக்கொள்ளவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு 2 கப் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அரைத்த பிஸ்தா  விழுதை போட்டு   அடுப்பை மிதமான   தீயில் வைத்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக கிளறி இறக்கி ஆறவைக்கவும்.

அகலாமான பாத்திரம் ஒன்றில் திரவ குளுக்கோஸ், முந்திரி காய்ந்த திராட்சை, 1 மீதமுள்ள கப் பிஸ்தா, 2 கப் சர்க்கரை  ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பின் ஆறவைத்த பிஸ்தா கலவையை சிறு உருண்டைகளாக்கி அதனுள் திரவ குளுக்கோசுடன் கலந்து    கலந்து வைத்துள்ள உருண்டையை வைத்து பிஸ்தா கலவயால் மூடி, இரு துண்டுகளாக்கி பரிமாறவும்.     

No comments:

Post a Comment